YSS Dashboard

சங்கல்பம், தியானம் — இங்கே இருந்து நேரடியாக திறக்கவும்.

🧭

சங்கல்பம் (Affirmations)

பரம்பொருள் சார்ந்த சங்கல்பங்கள் — உடலினை கடந்த ஆன்ம உணர்வு.

இங்கே தட்டவும் திறக்க.

1 சங்கல்பம் (Affirmation)

"நான் உடலல்ல, இரத்தமல்ல, சக்தியல்ல, எண்ணங்களல்ல, மனமல்ல, அகந்தையல்ல, சூட்சும உடலுமல்ல; அவற்றை ஒளியூட்டி, அவை மாறிய போதிலும் தான் மாறாது இருக்கும் அழிவற்ற ஆன்மாவே நான்."

2 சங்கல்பம் (Affirmation)

"நான் உடல் அல்ல. நான் கண்ணுக்குப் புலனாகாதவன். நான் பேரானந்தம். நான் பேரொளி. நான் பேரறிவு. நான் பேரன்பு. நான் இந்தப் பூவுலக வாழ்க்கையைக் கனவு கண்டுகொண்டிருக்கிற இந்தக் கனவு உடலில் உறைகின்றேன், நான் என்றுமே சாசுவதமான பரம்பொருள்.
நான் எல்லைக்குட்பட்ட அனைத்திற்கும் அப்பாற்பட்டவன்…நானே விண்மீன்கள், நானே அலைகள், நானே அனைத்தின் பேருயிர்; நானே எல்லா இதயங்களிலும் உள்ள நகைப்பொலி, நானே மலர்களின் முகங்களிலும் ஒவ்வோர் ஆன்மாவிலும் உள்ள புன்னகை. எல்லாப் படைப்பையும் தாங்கும் பேரறிவும் மகா சக்தியும் நானே."

3 சங்கல்பம் (Affirmation)

ஓ தெய்வத் தந்தையே, பேரண்டப் பேருணர்வுநிலை எனும் உனது பெருங்கடலின் நெஞ்சகத்தில் உணர்வுநிலை எனும் அலை நான். நான் ஒரு குமிழி; கடலாக்கென்னை.
❖ ❖ ❖
நான் நிலையான, நீண்ட, ஆழ்ந்த, இடைவிடாத தியானத்திலிருந்து வரும் ஆனந்தத்தில் இறைவனின் இராஜ்ஜியத்தைத் தேடுவேன். இறைவனுடன் தொடர்புகொள்வதன் மூலம், நான் அவனது குழந்தையாக மீட்டுவரப்படுவேன். முதலில் இறைவனின் குழந்தையாக ஆகி, நான் கேட்காமல் அல்லது யாசிக்காமல், எல்லா வளங்கள், ஆரோக்கியம், ஞானம் ஆகியவற்றில் என் பங்கைப் பெறுவேன்.
நான் என் இச்சா சக்தியை ஆக்கப்பூர்வமாக, திட்டமிட்டு, தொடர்ந்து மற்றும் நிதானமாக, என்றும்-பெருகும் சக்தியுடன், அது தனது மானுட மாயையின் வரையறையைக் கைவிட்டு சர்வ சக்திவாய்ந்த தெய்வீகப் பெரும் இச்சாசக்தியாக ஆகும் வரை பயன்படுத்துவேன்.

4 சங்கல்பம் (Affirmation)

“நான் சாசுவதப் பேரொளியில் மூழ்கியுள்ளேன். அது என் இருப்பின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவுகிறது. நான் அந்த ஒளியில் வாழ்கிறேன். தெய்வீகப் பரம்பொருள் என்னை உள்ளும் புறமும் நிரப்புகிறது.”

5 சங்கல்பம் (Affirmation)

“இறைவன் என்னுள்ளும் என்னைச் சுற்றிலும், என்னைப் பாதுகாத்தவாறு இருக்கிறான்; ஆகவே நான் அவனுடைய வழிகாட்டும் ஒளியை அடைத்துவிடும் அச்சத்தை நீக்குவேன்.”

6 சங்கல்பம் (Affirmation)

“பரிபூரணத் தந்தையே, உன் ஒளி, கிறிஸ்துவின் ஊடாக, எல்லா மதங்களையும் சார்ந்த மகான்களின் ஊடாக, இந்தியக் குருமார்களின் ஊடாக, மற்றும் என் ஊடாகப் பாய்கிறது. இந்தத் தெய்வீக ஒளி என் எல்லா உடலுறுப்புகளிலும் உள்ளது, நான் நலமாக உள்ளேன்.”

7 சங்கல்பம் (Affirmation)

“இறைவனின் சக்தி வரம்பற்றது என்று நான் அறிவேன்; நான் அவனுடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளதால், நானும் எல்லாத் தடைகளையும் வெல்வதற்கான வலிமை பெற்றவன்.”

8 சங்கல்பம் (Affirmation)

“இறைவனின் பரிபூரண அன்பு, அமைதி, ஞானம் ஆகியவை என் வாயிலாக வெளிப்பட ஏதுவாக, என்னைத் தளர்த்தி, எல்லா மனச்சுமைகளையும் தூக்கி எறிகிறேன்.”

9 சங்கல்பம் (Affirmation)

“நான் பிறப்பில், துன்பத்தில், ஆனந்தத்தில், செயலில், தியானத்தில், அறியாமையில், சோதனைகளில், மரணத்தில், மற்றும் இறுதி முக்தியில் உன் எல்லாவற்றையும்-பாதுகாக்கும் சர்வவியாபகத்தின் ஒளிவட்டத்தால் எப்போதும் சூழப்பட்டிருக்கிறேன் என்பதை உணர எனக்குக் கற்றுக் கொடுப்பாய்.”

10 சங்கல்பம் (Affirmation)

“உன் நன்மையெனும் ஒளியும் உன் பாதுகாக்கும் சக்தியும் என்றும் என்னூடாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. நான் அவற்றைப் பார்க்கவில்லை, ஏனெனில் என் விவேகம் எனும் கண்கள் மூடியிருந்தன. இப்போது உன் அமைதி எனும் ஸ்பரிசம் என் கண்களைத் திறந்துவிட்டன; உன் நன்மையும் தவறாத பாதுகாப்பும் என்னூடாகப் பாய்கின்றன.”

11 சங்கல்பம் (Affirmation)

“என் தெய்வத் தந்தையே, நீதான் பேரன்பு, நான் உன் பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளேன். நானே பேரன்பின் பேரண்ட உலகம், அதில் நான் எல்லாக் கோள்களையும், எல்லா நட்சத்திரங்களையும், எல்லா உயிரினங்களையும், எல்லாப் படைப்புகளையும் மினுமினுக்கும் ஒளிகளாகப் பார்க்கிறேன். பிரபஞ்சம் முழுவதற்கும் ஒளியூட்டும் பேரன்பு நானே.”

12 சங்கல்பம் (Affirmation)

“அழுபவர்களைச் சிரிக்க வைப்பது கடினம் என்றபோதிலும் கூட, நானே சிரிப்பதன் மூலம், அவர்களைச் சிரிக்க வைக்க நான் உதவி செய்வேன்.”

13 சங்கல்பம் (Affirmation)

“நான் அன்பையும் நல்லெண்ணத்தையும் மற்றவர்களுக்குப் பரவச் செய்வேன், அதனால் இறைவனின் அன்பு எல்லோரிடம் வருவதற்கான ஒரு வழியைத் திறப்பேன்.”