ஆன்மாவின் இணைப்பு
சிறந்த இந்திய ஆன்மீக ஆசான்கள் தெய்வீகப் பேரிருப்புடன் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்துவதற்காக இராஜ யோகம் எனும் வழிமுறையை கண்டறிந்தனர். இது தனிமனித ஆன்ம-அலையை பரம்பொருள் எனும் கடலுடன் மீண்டும் இணைக்கும் விஞ்ஞானமாகும்.
"உடலை வருத்தித் தவம் செய்பவர்களை விட யோகி சிறந்தவன்...
எனவே, ஓ அர்ஜுனா, நீ யோகி ஆகுக!"
- பகவத் கீதை (பகவான் கிருஷ்ணன்)
🌟 வாழ வழிகாட்டும் சிந்தனைகள்
நாம் இறைவனிடமிருந்து கீழிறங்கி வந்திருக்கிறோம், மேலும் நாம் அவனிடமே திரும்ப மேலேறிச் செல்ல வேண்டும். நாம் நமது தெய்வத் தந்தையிடமிருந்து பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது, மேலும் நாம் அவருடன் உணர்வுபூர்வமாக மீண்டும் ஐக்கியமாக வேண்டும். யோகம் நமக்கு, எப்படி பிரிவெனும் மாயையிலிருந்து மேலெழுந்து இறைவனுடனான நமது ஐக்கியத்தை உணர்ந்தறிவது என்று போதிக்கிறது.
- பரமஹம்ஸ யோகானந்தர்
நீர் சலசலக்கும் போது சந்திரனின் பிரதிபலிப்பை தெளிவாக அதில் காண முடியாது, ஆனால் நீரின் மேற்பரப்பு சலனமற்று இருக்கும் போது சந்திரனின் முழுமையான பிரதிபலிப்பு தெளிவாகக் காணப்படுகிறது. இது போலவேதான் மனத்துடனும்: அது அசைவின்றி அமைதியாக இருக்கும் போது ஆன்மாவின் சந்திரன் போன்ற முகம் தெளிவாகப் பிரதிபலிப்பதை நீங்கள் காண்கின்றீர்கள். ஆன்மாக்கள் என்ற முறையில் நாம் இறைவனின் பிரதிபலிப்புகள் ஆவோம். மனமெனும் தடாகத்தில் அமைதியற்ற எண்ணங்களைத் தியான உத்திகளால் நாம் உள்ளிழுத்துக் கொள்ளும் போது, நமது ஆன்மாவை, பரமாத்மாவின் ஒரு பூரணப் பிரதிபலிப்பை நாம் காண்கிறோம். மேலும் ஆன்மாவும் இறைவனும் ஒன்றென்பதை உணர்கின்றோம்.
- பரமஹம்ஸ யோகானந்தர்
👁️ ஆன்மீகக் கண் (The Spiritual Eye)
தியானப் பயிற்சியின் துவக்கத்திலிருந்தே, புருவமத்தியில் அமைந்துள்ள சக்திவாய்ந்த கூடஸ்த உணர்வுநிலை மையத்தைப் (Kutastha) பற்றி அறிவது அவசியம்.
- இருப்பிடம்: புருவமத்தி ("ஒற்றைக்கண்" அல்லது "வாயில்").
- தொடர்பு: இது மூளையின் அடியில் உள்ள பீனியல் சுரப்பியின் (Pineal Gland) பிரதிபலிப்பு (ஆஞ்ஞா சக்கரம்).
- வடிவம்: வெள்ளியைப் போல ஒளிரும் ஐம்முக வெண்ணிற நட்சத்திரம்.
ஆன்மீகக் கண்ணின் குறியீடு
தினசரி தியானப் பயிற்சி
சங்கல்பம் செய்வது எப்படி?
சங்கல்பம் முழுவதையும் முதலில் உரத்து, பின் மென்மையாக மற்றும் இன்னும் மெதுவாக, உங்கள் குரல் முணுமுணுப்பாக ஆகும்வரை திரும்பத் திரும்பக் கூறுங்கள். அதன்பின் படிப்படியாக அதை மனத்தில் மட்டுமே, நாக்கையோ அல்லது உதடுகளையோ அசைக்காமல், நீங்கள் ஆழ்ந்த, தொடர்ந்த ஒருமுகப்பாட்டை — உணர்வற்ற நிலை அல்ல, தடையிலாச் சிந்தனையின் ஆழ்ந்த தொடர்ச்சியை — அடையும் வரை வலியுறுத்திக் கூறுங்கள். தொடர்ந்து மன சங்கல்பத்தைச் சொன்னபடி ஆழத்தில் சென்றால், அதிகரிக்கும் ஆனந்தமும் அமைதியும் தெளிவாக உணரப்படும்.
1 சங்கல்பம் (Affirmation)
"நான் உடலல்ல, இரத்தமல்ல, சக்தியல்ல, எண்ணங்களல்ல, மனமல்ல, அகந்தையல்ல, சூட்சும உடலுமல்ல; அவற்றை ஒளியூட்டி, அவை மாறிய போதிலும் தான் மாறாது இருக்கும் அழிவற்ற ஆன்மாவே நான்."
2 சங்கல்பம் (Affirmation)
"நான் உடல் அல்ல. நான் கண்ணுக்குப் புலனாகாதவன். நான் பேரானந்தம். நான் பேரொளி. நான் பேரறிவு. நான் பேரன்பு. நான் இந்தப் பூவுலக வாழ்க்கையைக் கனவு கண்டுகொண்டிருக்கிற இந்தக் கனவு உடலில் உறைகின்றேன், நான் என்றுமே சாசுவதமான பரம்பொருள்.
நான் எல்லைக்குட்பட்ட அனைத்திற்கும் அப்பாற்பட்டவன்…நானே விண்மீன்கள், நானே அலைகள், நானே அனைத்தின் பேருயிர்; நானே எல்லா இதயங்களிலும் உள்ள நகைப்பொலி, நானே மலர்களின் முகங்களிலும் ஒவ்வோர் ஆன்மாவிலும் உள்ள புன்னகை. எல்லாப் படைப்பையும் தாங்கும் பேரறிவும் மகா சக்தியும் நானே."
3 ஆரம்ப சுவாசப் பயிற்சி 1
உடலை இறுக்கித் தளர்த்தும் முறை (3 முறை).
- A: "ஹ, ஹா" என வாய் வழியாக வெளியேற்றவும்.
- B: நாசி வழியாக இழுத்து, உடலை இறுக்கவும்.
- C: "ஹ, ஹா" என வெளியேற்றித் தளர்த்தவும்.
4 பிரார்த்தனை & கீதமிசைத்தல்
"நீ வருவாய், தெய்வத் தந்தையே, உனது இருப்பின் பரந்த இராஜ்ஜியத்தைக் காட்டுவாயாக!"
"எனது இதயத்திற்கு வழிபடக் கற்றுக் கொடுப்பாய்..."
5 சீர் சுவாசப் பயிற்சி (20:20:20 + 5)
6 முதல் 12 முறை செய்யவும்.
சுற்றுகள்
0 / 6
6 தியானம் (Meditation Proper)
கவனம்: புருவமத்தி (ஆன்மீகக் கண்).
மந்திரம்: "உன்னை வெளிப்படுத்துவாயாக!"
டைமர் அமைப்புகள் (Settings)
வார அட்டவணை
திங்கள் முதல் ஞாயிறு வரை உங்கள் தியானப் பயிற்சிகளைப் பதிவு செய்யவும்.
திங்கள் (Monday)
பயமின்றி வாழ்தல் பற்றிய வழிநடத்தப்பட்ட தியானம்
செவ்வாய் (Tuesday)
வெற்றிக்காக ஓர் அகச்சூழலை உருவாக்குதல்
புதன் (Wednesday)
அமைதி
வியாழன் (Thursday)
உணர்வுநிலையின் விரிவாக்கம்
வெள்ளி (Friday)
அன்பை விரிவுபடுத்துதல் பற்றிய வழிநடத்தப்பட்ட தியானம்
சனி (Saturday)
ஒளியாக இறைவன் பற்றிய வழிநடத்தப்பட்ட தியானம்
ஞாயிறு (Sunday)
உங்கள் குறிப்புகளைச் சேர்க்கவும்.
நிறைவு
இறைவனுக்கான ஓர் இதயங்கனிந்த நன்றியுடன் தியானத்தை நிறைவு செய்யவும்.
ஆன்மாவிற்கு எதிராக அகந்தை
ஆன்மா, பூத உடலுடனும் அதன் குறைபாடுள்ள புலனுணர்வுக் கருவிகளுடனும் அடையாளப்படுத்திக் கொண்டு மனித அகந்தை ஆகிறது. மாயையின் மூலம் மாறாத அமரத்துவ ஆன்மா, மாற்றத்துடனும் அழிவுடனும் தன்னையே அடையாளப்படுத்திக் கொள்கிறது.
அனைத்து உண்மையான ஆன்மீக போதனைகளின் நோக்கம், அகந்தை மற்றும் அதன் தவறான மனப்பான்மைகளைக் கடந்து, ஆன்ம உணர்வுநிலையின் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறுவதே ஆகும். நாம் பரம்பொருளுடன் ஒன்றாகி இருக்கிறோம் என்பதை அறிவதற்கான தலைசிறந்த வழி தியானமாகும்.
சுய-வல்லமை அடையும் வழிமுறை
மனக் கட்டுப்பாடு
உடலை ஒருமுகப்பட்ட மனம், இச்சா சக்தி மற்றும் பகுத்தறியும் விவேகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல்.
உண்மையான பேரரசர்
தவறாக வழிகாட்டப்பட்ட மனத் திறன்களை, தெய்வீக ஞானம் மற்றும் அன்பு கொண்ட ஆன்மாவின் (பேரரசரின்) ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்.
தெய்வீக ஐக்கியம்
தனிப்படுத்தப்பட்ட ஆன்மாவை, அனைத்துப் படைப்புகளிலும் ஊடுருவியிருக்கும் எல்லையற்ற சர்வவியாபகப் பரம்பொருளுடன் ஐக்கியமாக்குதல்.
மனிதனின் மூன்று உடல்கள்
ஆன்மா எனும் ஒளிக்கதிர் மூன்று உறைகளால் மூடப்பட்டுள்ளது
1. காரண உடல்
(Causal Body)
பேரின்பத்தாலும் தூய உள்ளுணர்வு-உணர்வுநிலையாலும் ஆனது. இதுவே ஆன்மாவின் முதல் உறை.
2. சூட்சும உடல்
(Astral Body)
மனம், அறிவு மற்றும் பிராணன் (உயிர்ச்சக்தி) ஆகியவற்றால் ஆனது. அழியாத ஒளி வடிவம்.
3. பூத உடல்
(Physical Body)
அழியும் பொருட்களால் ஆனது. தசை மற்றும் எலும்புகளைக் கொண்ட தற்போதைய வடிவம்.
கதை: ஓர் அரசனை தன் ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்த ஒரு மகான் இறைவனின் இருப்பை அகமுகமாக உணர்ந்த வண்ணம், எல்லா முறையான வெளிப்புறக் கடமைகளையும் நிறைவேற்றுவதே வாழ்வதற்கான சிறந்த வழியாகும் — நீடித்த மகிழ்ச்சிக்கான வழி.
இன்று உங்கள் முக்கியப் பணிகளை எழுதிக் குறிப்பிடுங்கள்; அவற்றை நிறைவேற்றி “வெளிப்புறக் கடமைகளையும் நிறைவேற்றுவதே” என்ற பாடத்தைச் செய்து காண்போம்.