Part 3

இறைவனின் பத்து வெளிப்பாடுகள்

யோகதா சத்சங்க போதனைகளில் விளக்கப்பட்ட இறையனுபூதியின் வெளிப்பாடுகள்.

இறைவன் தானே — ஒப்புயர்வற்ற, வெளிப்படுத்தப்படாத, முழுமுதல் பரம்பொருள் — என்றென்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவனாக இருக்கிறான். ஆனால் அவனது உள்ளார்ந்த எல்லைகடந்த இயல்பைக் குறிப்பாக உணர்த்தும் அவனது எண்ணற்ற வெளிப்பாடுகள் யோகதா சத்சங்கப் போதனைகளில் விளக்கப்பட்டுள்ளன. நான் உங்களுக்குக் கூறுவது நூல்களிலிருந்தல்ல, ஆனால் என் சொந்த இறையனுபூதியின் சான்று. நீங்கள் பாடங்களில் உள்ள தியான உத்திகளைப் பயிற்சி செய்வதில் உண்மையாகவும் விடாமுயற்சியுடனும் இருந்தால், நீங்களே இறைவனின் என்றும் புதிய வெளிப்பாடுகளை அனுபவிக்கலாம் மற்றும் அவற்றின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட பரம்பொருளின் விவரிக்கவொண்ணா பேரின்பமய அனுபூதியை அடையலாம்.

1. பேரதிர்வு

படைப்பில் இறைவனின் முதன்மையான வெளிப்பாடு பேரதிர்வு ஆகும்.

2. பேரொலி

ஓம்/ஆமென் எனும் இறைவனின் குரல்; எல்லா ஒலிகளுக்கும், மொழிகளுக்கும் மூலப்பொருள். ஓம்-உடன் தொடர்பு கொள்வது இறைவனை அடைவதற்குச் சமம்.

3. பேரொளி

பேரொலியுடன் இணைந்து பேரதிர்வு, பேரொளியையும் உருவாக்குகிறது. “ஒளி தோன்றுக” — அதிலிருந்து எல்லாப் படைப்பும் தோன்றுகிறது.

4. பேரறிவாற்றல்

எண்ணற்ற பிரபஞ்சங்களையும் உயிர்மைகளையும் ஒழுங்குபடுத்தி, காக்கி, அழிக்கும் மாறாத சாசுவதத் தத்துவம்.

5. பெரும் ஞானம்

உருவெடுக்கும் பேரறிவாற்றல்; ஆன்மாவின் உள்ளுணர்வால் உண்மையை நேரடியாக அறிதல் — நூலின்றி பிரபஞ்ச ஞானம் காணுதல்.

6. பெரும் பக்தி

இறைவனைப் பெரும் பக்தியாக உணரும்போது, ஆழ்ந்த மரியாதை மற்றும் ஏக்கம் நிறைந்த உறவு; உரிய காலத்தில் அவரது அன்பான மறுமொழி.

7. பேரன்பு

பேரன்பு வெளிப்படும் போது பக்தனும் இறைவனும் ஒன்றாவர்; எல்லா இருப்பிலும் நல்லிணக்க ஒற்றுமை தெரியும்.

8. பேரமைதி

இறைவனின் இருப்பின் முதற்சான்று — சஞ்சலம், துக்கம், கவலை இன்றி உன்னத அசைவின்மையையும் நல்வாழ்வையும் தரும் அமைதி.

9. பெரும் சாந்தம்

பேரமைதியை விட ஆழமான நிலை; கலக்கம் இல்லா ஏரி போல, அதில் இறைவன் சந்திரன் போல பிரதிபலிக்கிறார்.

10. பேரின்பம்

இறைவனின் சாசுவத இயல்பு — என்றும்-உள்ள, எல்லாம்-அறியும், என்றும்-புதிய பேரானந்தம்; அனைத்து மகிழ்ச்சியின் வற்றாத ஊற்று.